இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட உள்ளது. 2026ஆம் ஆண்டு ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு என்பதால் இந்த நிகழ்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வரும் போது ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படும். அதன்பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.