IND vs ENG: தொடர்ந்த 32 ஆண்டுகால வரலாறு.. மீண்டும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
FIH World Cup 2026: இங்கிலாந்தின் பந்துரக் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 16வது நிமிடத்தில் இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். 24வது நிமிடத்தில் தில்பிரீத் இரண்டாவது கோலை அடித்து இந்தியாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், இதற்குப் பிறகு இங்கிலாந்து பாதி ஆட்டத்தில் பின்தங்கத் தொடங்கியது.
ஹாக்கி உலகக் கோப்பையின் (FIH World Cup 2026) 16வது பதிப்பை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது, ஆனால், இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து, இந்தியாவை (Indian Hockey Team) 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம், 1994 முதல் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் ஒருபோதும் தோற்றதில்லை என்ற சாதனையை இங்கிலாந்து தக்கவைத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 19ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ALSO READ: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!




போட்டியில் நடந்தது என்ன?
𝗣𝗢𝗜𝗡𝗧𝗦 𝗧𝗔𝗕𝗟𝗘 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘! 📊🏑🇮🇳
India sit second in Men’s Pool D at the FIH Hockey World Cup Belgium & Netherlands 2026 with 3 points from two matches. 💪
England lead the table, with Pakistan and Wales completing the Pool D standings.#HockeyIndia #IndiaKaGame… pic.twitter.com/kK1X0gcXfu
— Hockey India (@TheHockeyIndia) August 17, 2026
இங்கிலாந்தின் பந்துரக் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 16வது நிமிடத்தில் இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். 24வது நிமிடத்தில் தில்பிரீத் இரண்டாவது கோலை அடித்து இந்தியாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், இதற்குப் பிறகு இங்கிலாந்து பாதி ஆட்டத்தில் பின்தங்கத் தொடங்கியது. 38வது நிமிடத்தில் ரஷ்மியர் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார், 42வது நிமிடத்தில் கிராஃப்ட் கோல் அடித்து இங்கிலாந்துக்கு 3-2 என முன்னிலை பெற்றுத் தந்தார். மேலும் 55வது நிமிடத்தில் பந்துரக் இங்கிலாந்தின் நான்காவது கோலையும் தனது இரண்டாவது கோலையும் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்த போட்டி..
இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம், ‘டி’ பிரிவு புள்ளிப் பட்டியலில் தனது முதலிடத்தை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. இங்கிலாந்தின் அடுத்த ஆட்டம் வேல்ஸ் அணிக்கு எதிராக உள்ளது. அதே சமயம், இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்த ஆட்டத்தில் மோதவுள்ளன. ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும்.