AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Asian Games 2026: விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள்.. பலமிக்க இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

Asian Games Hockey India: 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Gamens 2026) 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை (Indian Hockey Team) ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. நடப்பு ஆசிய சாம்பியன்களான இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குவார். மேலும், இந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ மிட் பீல்டர் வீரரான மன்பிரீத் சிங்கும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

Asian Games 2026: விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள்.. பலமிக்க இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!
இந்திய ஹாக்கி அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 29 Jul 2026 17:24 PM IST

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வருகின்ற 2026 செப்டம்பர் 19 முதல் 2026 அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Gamens 2026) 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை (Indian Hockey Team) ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. நடப்பு ஆசிய சாம்பியன்களான இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குவார். மேலும், இந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ மிட் பீல்டர் வீரரான மன்பிரீத் சிங்கும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போதைய சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

ALSO READ: கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்.. உலகக் கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

பங்கேற்கும் 12 அணிகள்:


இந்தத் தொடரில் 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள், தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பங்கேற்கின்றன. நடப்புச் சாம்பியனான இந்தியா, போட்டியை நடத்தும் நாடான ஜப்பான், கொரியா, வங்கதேசம், இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றுடன் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதேபோல், சீனா, சீன தைபே, கஜகஸ்தான், மலேசியா, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ககாமிகஹாராவில் உள்ள கிஃபு மாகாணப் பசுமை ஸ்டேடியத்தில் நடைபெறும்.

ஹர்மன்பிரீத் சிங் உறுதி:

இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், “இளம் வீரர் முதல் அனுபவ வீரர் வரை அனைவரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எந்தவித அழுத்தமும் இன்றி ஆட்டத்தை ரசித்து விளையாடுவதும், நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதுமே எங்களின் முக்கிய நோக்கமாகும்,” என்றார்.

ALSO READ: சிறிய நாட்டில் இருந்து வெண்கல பதக்கம்.. அசத்திய 17 வயது வீராங்கனை!

இந்திய ஹாக்கி அணி

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா.

டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப் சிவாச்.

மிட்ஃபீல்டர்கள் : ராஜிந்தர் சிங், ராஜ் குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகந்த் சர்மா, விவேக் சாகர் பிரசாத்.

பார்வேர்ட் வீரர்கள்: தில்ப்ரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.

Follow Us