CWG 2026: பளு தூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்.. 53 கிலோ எடை பிரிவில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!
Gyaneshwari Yadav Wins Silver: 53 எடை கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் ஞானேஸ்வரி யாதவ் மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கினார். ஞானேஸ்வரி ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் தூக்கினார். நைஜீரியாவின் ஓனோமே ஓமோலோலா டிடி, மொத்தம் 206 கிலோ (93 கிலோ மற்றும் 113 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் (CommonWealth Games 2026) இந்திய பளுதூக்கும் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று கொடுத்து வருகின்றனர். இன்று அதாவது 2026 ஜூலை 27ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான மகளிர் 53 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் (Gyaneshwari Yadav) சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் 4வது பளுதூக்கும் பதக்கமாகும். இது இந்திய பளு தூக்கும் அணி எவ்வளவு வலுவானது என்பதை காட்டுகிறது.
53 எடை கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் ஞானேஸ்வரி யாதவ் மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கினார். ஞானேஸ்வரி ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் தூக்கினார். நைஜீரியாவின் ஓனோமே ஓமோலோலா டிடி, மொத்தம் 206 கிலோ (93 கிலோ மற்றும் 113 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். இதுவும் ஒரு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி சாதனையாகும்.




ALSO READ: இந்தியாவின் அதிவேக மனிதன்.. காமன்வெல்த்தில் தகுதி சுற்றுடன் வெளியேறிய சோகம்!
பளுதூக்குதலில் 4வது பதக்கம்:
|| #IndiaAtCWG ||
𝐆𝐲𝐚𝐧𝐞𝐬𝐡𝐰𝐚𝐫𝐢 𝐘𝐚𝐝𝐚𝐯 𝐖𝐢𝐧𝐬 𝐒𝐢𝐥𝐯𝐞𝐫 𝐌𝐞𝐝𝐚𝐥🥈 𝐈𝐧 𝐖𝐞𝐢𝐠𝐡𝐭𝐥𝐢𝐟𝐭𝐢𝐧𝐠 (𝟓𝟑𝐤𝐠).
Indian weightlifter Gyaneshwari Yadav clinched the silver medal in women’s 53kg category at the Commonwealth Games in Glasgow. #TeamIndia… pic.twitter.com/sqiGgfa5n8
— All India Radio News (@airnewsalerts) July 27, 2026
ஞானேஸ்வரிக்கு முன்பே, இந்திய பளுதூக்கும் வீரர்கள் பதக்க மேடையில் தங்களது இடங்களை உறுதி செய்திருந்தனர். இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான போட்டியிலும் இந்திய வீரர்களும் ஆதிக்கம் செலுத்தினர். ரிஷிகாந்த் சிங் (60 கிலோ) மற்றும் முத்துபாண்டி ராஜா (65 கிலோ) ஆகியோர் தத்தமது பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். அதேநேரத்தில் ஜகண்டு குமார் பாரா பவர் லிஃப்டிங்கில் நாட்டுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார்.
ALSO READ: இந்தியாவிற்கு முதல் தங்கம்.. 190 கிலோ எடை தூக்கி தங்கத்தை வென்ற மீராபாய் சானு!
கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில், இந்திய பளுதூக்கு வீராங்கனை தனது முழு பலத்தையும் பிரயோகித்து, 111 கிலோ எடையைத் தூக்கி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்தார். இருப்பினும், தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் முன்னணியில் இருந்த நைஜீரியாவின் ஓனோமே, 113 கிலோ எடையைத் தூக்கி தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனால், ஞானேஸ்வரி யாதவ் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், ஞானேஸ்வரி யாதவின் வெள்ளி பதக்கம் இந்தியாவின் பதக்க பட்டியலில் கௌரவம் செய்தது.