AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

Special Train for Madurai : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 16, 2026 இன்று மாலை தாம்பரத்திலிருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. தேவை ஏற்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் –  மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Sep 2026 08:53 AM IST

சென்னை, செப்டம்பர் 16 : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 16, 2026 இன்று மாலை தாம்பரத்திலிருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் பயணிப்பார்கள் என்பதால் பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்க்கும் பொறுட்டு தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வு என்பதால் மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மதுரைக்கு ஏற்கனவே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

இந்த நிலையில் மக்கள் அதிக அளவில் பயணிப்பார்கள் என்பதால் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 16, 2026 இன்று மாலை தாம்பரத்திலிருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெழு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரயிலில் செல்லும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 16, 2026 இன்று மாலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் மதுரையை அதிகாலை 2.20 மணிக்கு சென்றடையும். அதே போல மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து செப்டம்பர் 17, 2026 பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அன்று இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us