AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிகாலையில் பரபரப்பு.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் குற்ற புலனாய்வு போலீசார் சோதனை!

Crime Branch Police Raid Anbil Mahesh House : திருச்சியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீட்டில் சென்னை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் பரபரப்பு.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் குற்ற புலனாய்வு போலீசார் சோதனை!
அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Sep 2026 08:24 AM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில், ஏற்கனவே லஞ்சம் பெற்றதாக பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 16- ஆம் தேதி) சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்த அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிரடியாக இறங்கி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us