AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: இன்று 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை – வானலை மையம் அறிவிப்பு

Tamil Nadu weather today : நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 16, 2026 இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த 6 மாவட்டங்களுக்கும் வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Nadu Weather forecast: இன்று 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை – வானலை மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Sep 2026 06:35 AM IST

சென்னை, செப்டம்பர் 16 : நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் செப்டம்பர் 16, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்க்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் துறையில் முறைகேடு புகார்.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை.. அதிர்ச்சி பின்னணி!

இது தவிர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, விருதுநகர், மதுரை சிவகங்கை புதுக்கோட்டை, ராமாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில், செப்டம்பர் 16, 2026 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து தொடர்ந்து, நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 17, 2026 நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த காத்திருந்த அமைச்சர் மரிய வில்சன்.. பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி..

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் சூறைக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல், இதர தென்கிழக்கு வங்கக் கடலிலும் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சூறைக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us