AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..

Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Sep 2026 14:44 PM IST

செப்டம்பர் 15, 2026: தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 15ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை:

செப்டம்பர் 16ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 17ஆம் தேதி அன்று, நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: பெண் போலீசிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி கைது – பரபரப்பு தகவல்

சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை:

செப்டம்பர் 18ஆம் தேதி அன்று, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 19ஆம் தேதி அன்று, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கான வாய்ப்புகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: ஏர்வாடியில் ரத்த களறி.. இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.. கொலையாளிகளுக்கு வலை வீசிய போலீசார்!

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us