AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் போலீசிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி கைது – பரபரப்பு தகவல்

Case Filed Against TVK Functionary :சென்னை அயனாவரத்தில் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக ஏற்பட்ட புகாரில் பெண் போலீசிடம் ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி மதன் ராஜ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் போலீசிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி கைது – பரபரப்பு தகவல்
தவெக நிர்வாகி மதன்ராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2026 14:12 PM IST

சென்னை, செப்டம்பர் 15 : சென்னை அயனாவரத்தில் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக ஏற்பட்ட புகாரில் பெண் போலீசிடம் ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி மதன் ராஜ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்த பெண் காவலரை ஒருமையில் பேசியுள்ளனர்.

பெண் போலீசிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகி கைது

மேலும், பெண் காவலர் கொடுத்த தகவலின் படி அங்கு வந்த தனிப்படை எஸ்.ஐ மேகநாதன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். குடிபோதையில் இருந்த மூன்று பேரை போலீசார் அயனாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தவெக வில்லிவாக்கம் கிழக்கு பகுதி துணை செயலாளர் மதன் ராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், எஸ்.ஐ மேகநாதன் கொடுத்த புகாரில் வழக்கறிஞர் ஸ்ரீதர்ராஜ், சட்டக் கல்லூரி மாணவர் முகமது சகபுதீன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க : வினாயகர் சிலை ஊர்வலம்: உங்கள் ஊரில் போக்குவரத்து மாற்றமா? இதோ தகவல்!

இதற்கிடையில் தவெக எம்.எல்.ஏ ராம்குமார் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் காக்கியில் இருக்கும் பெண் போலீசுக்கே பாதுகாப்பில்ல என கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், சமூக வலைதளங்களில் தங்களைக் கேள்வி கேட்கும் பெண்களை ஆபாசமாகத் திட்டித் தீர்க்கும் தவெக ‘கீபோர்டு’ பொறுப்புகள், இப்போது அதிகாரம் கைக்கு வந்ததும் சீருடையில் இருக்கும் பெண் காவலர்களிடமே அத்துமீறத் தொடங்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் சிக்கியவரைக் காப்பாற்றும் வகையில், தவெக எம்.எல்.ஏ ராம்குமார் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க : மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு – திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு

தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பெண் காவலரிடம் அத்துமீறினால், தவெக எம்.எல்.ஏ அவனைக் காவல் நிலையத்துக்கே சென்று ரவுடியைப் போல் மீட்டு வருவார். ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கற்ற முதலமைச்சரோ, சட்டமன்றத்தில் தவெகவினர் யாரும் காவல் நிலையத்தில் தலையிடுவதில்லை எனப் பொய் பேசுவார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்க, நாட்டை ஆளத் துப்பில்லாத இந்த டம்மி முதலமைச்சரோ இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமின்றி, லண்டனில் சொகுசாக கார் ரேஸ் பார்த்து ரீல்ஸ் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us