AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காற்று வாங்க சென்றவர்களுக்கு நடந்த சோகம்.. கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இருவர்.. பெண் பலி!

Young Man and Woman Dragged By Waves In Sea | சென்னையில் இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்ற நிலையில், இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கரைக்கு மீட்டு வரப்பட்ட பெண் பலியான நிலையில், மாயமான இளைஞரை தேடி வருகின்றனர்.

காற்று வாங்க சென்றவர்களுக்கு நடந்த சோகம்.. கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இருவர்.. பெண் பலி!
உயிரிழந்த பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Sep 2026 07:23 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : சென்னையில் (Chennai) காற்று வாங்க கடற்கரைக்கு சென்ற பெண் ஒருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுடன் இளைஞர் ஒருவரும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மாயமான அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் – பெண் பரிதாப பலி

சென்னை, தாழங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான கலைச்செல்வி. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான், சம்பவத்தன்று அவருடன் பணியாற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஆரணி பகுதியை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவர், கலைச்செல்வியின் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா சிறப்பு பதக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த பெண்

சாப்பிட்டு முடித்த அவர்கள் அப்படியே காற்று வாங்குவதற்காக அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கலைச்செல்வி மற்றும் நவீன் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை கண்டு ஓடிவந்த பொதுமக்கள் போராடி கலைச்செல்வியை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க : காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்

காணாமல் போன இளைஞரை தேடி வருகின்றனர்

கலைச்செல்வி கரைக்கு கொண்டுவரப்பட்டு உயிரிழந்த நிலையில், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நவீனை தேடி பணிகள் நடைபெற்று வருகிறது. மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காற்று வாங்க கடற்கரைக்கு சென்ற நிலையில், இருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us