விநாயகர் சிலை வைப்பதில் தகராறு.. விவசாயி கொடூர கொலை.. ஷாக் சம்பவம்!
Farmer Killed In Ganesh Statue Issue | திண்டுக்கலில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில், விவசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விவசாயி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல், செப்டம்பர் 15 : திண்டுக்கலில் (Dindigul) விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 14, 2026) தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாப்பட்ட நிலையில், அதற்கான சிலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், விநாயகர் சிலை வைக்கும் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விநாயகர் சிலை வைப்பதில் தகராறு – விவசாயி படுகொலை
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன். இவருக்கு 47 வயது ஆகிறது. விவசாயியான இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் திண்டுக்கலில் உள்ள பொம்ம நாயக்கன் பட்டியில் வசித்து வருகின்றனர். ஒருவர், கருவாடு நாயக்கனூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து குவியும் மக்கள்.. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!




இந்த நிலையில், செப்டம்பர் 13, 2026 அன்று, அவரின் சொந்த ஊரான பொம்ம நாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் அவருக்கும் அவரது ஊரை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை வைத்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை முடித்துக்கொண்டு பொம்மன், கருவாடு நாயக்கணூரில் உள்ள தனது 3வது மனைவி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பொம்மன்
ஆனால், பொம்மன் அவரது 3வது மனைவியின் வீட்டிற்கு செல்லவில்லை. அப்போதுதான் அவர், முஷ்டகிணத்துப்படி என்ற பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது குறித்து போலீசார் மற்றும் பொம்மனின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொம்மனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : மத்திய பிரதேசத்துக்கு பாய்ந்த தமிழ்நாடு தனிப்படை.. தப்பிய திருடனை தூக்கிய தூத்துக்குடி போலீஸ்.. 40 பவுன் நகை திருட்டில் அதிரடி!
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விவசாயியை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.