சென்னையில் பூனை விஷம் வைத்து கொலை? – போலீஸ் விசாரணை
Chennai Cat Death Investigation : சென்னையில் தனது வளர்ப்பு பூனையை ஒருவர் விஷம் வைத்து கொன்றதாக கூறி நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனை பிறந்து 6 மாதமே ஆவதாகவும், மேலும் மிகுந்த ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதனால் பூனையின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 13 : சென்னையில் தனது வளர்ப்பு பூனையை ஒருவர் விஷம் வைத்து கொன்றதாக கூறி நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனை பிறந்து 6 மாதமே ஆவதாகவும், மேலும் மிகுந்த ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதனால் பூனையின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வளர்ப்பு பூனை மர்ம மரணம்
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, இவர் வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் தனது வீட்டில் பிறந்து 6 மாதமே ஆன பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் செப்டம்பர் 12, 2026 நேற்று பூனை மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தான் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த பூனை உயிரிழந்ததை பார்த்து மிகுந்த மனம் உடைந்துள்ளார்.
இதையும் படிக்க : இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டி – வீரபாண்டியன் அறிவிப்பு



அவர் தனது பூனையை மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் வளர்த்து வந்துள்ள நிலையில் அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். இதனால் அவரது பூனை திடீரென உயிரிழந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது பூனைக்கு யாரோ திட்டமிட்டே விஷம் வைத்திருக்கலாம் என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அவர் நடந்ததை கூறி எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது பூனையைக் கொன்றவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் எ கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். மேலும் பூனையின் உடலைக் கைப்பற்றி பூனையின் மரணத்துக்கு காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதனையடுத்து சைதாப்பேட்டையில் ள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : “முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பூனைக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ப்பு பூனை மரணம் தொடர்பாக போலீசில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.