“மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!
Minister Nirmal Kumar Slams DMK: மேடை போட்டு ஆபாசமாக பேச வைப்பதுதான் திமுகவின் கடைசி ஆயுதமா என்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான நிர்மல் குமார் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலான ஆபாச நாடகம் தமிழ்நாட்டு மக்களை, குறிப்பாக பெண்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
சென்னை, செப்டம்பர் 13: தமிழ்நாடு அரசியலில் ஆளும் திமுகவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரும் அரசியல் மேடை விவாதங்களும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. குறிப்பாக, சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்ட மேடைகளில் சேகர் பாபு மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான நிர்மல் குமார் திமுக தலைமைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!
திமுகவின் மேடைப் பேச்சுகளுக்கு நிர்மல் குமார் கேள்வி
திமுகவினரின் மேடைப் பேச்சுகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட அமைச்சர் நிர்மல் குமார், “மேடை போட்டு என்னைப் பற்றியும் எங்கள் தலைவர் விஜய் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா என்.கே.ஸ்டாலின் அவர்களே?” என நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திமுகவினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாகப் பெண்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதை என்றைக்கு உணரப் போகிறீர்கள் என்றும் அவர் வினவியுள்ளார்.
ஊழல் கேள்விகளுக்கு ஆபாசப் பேச்சே திமுகவின் பதிலா?
மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?…
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 13, 2026
மேலும் திமுகவின் அரசியல் பாணி குறித்துத் தாக்கிய அவர், எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம் மற்றும் அவர்களின் பொய்கள் குறித்து கேள்விகள் எழுகின்றனவோ, அப்போதெல்லாம் திமுக எடுக்கும் முக்கிய ஆயுதமே வன்முறையும் ஆபாசப் பேச்சும்தான் என்று குற்றம் சாட்டினார். தரமற்ற முறையில் திமுகவினர் பேசும் இத்தகைய பேச்சுகளை தங்களது சொந்த இல்லத்தில் உள்ள பெண்களிடமும் குழந்தைகளிடம் போட்டு காட்ட முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
நேர்மையான அரசியலால் களமிறங்கும் தவெக:
திமுகவின் தவறான அரசியலால் களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த பொதுமக்கள், இன்றைக்கு தளபதி விஜய்யின் வருகையால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் என்றும், அரசியலில் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கூர்ந்து கவனித்துத் தணிக்கை செய்து வருகிறார்கள் என்பதையும் திமுக தலைமை உணர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். குழந்தைகள் மற்றும் பெண்களின் முகமாக இருக்கும் தளபதி விஜய்யின் தவெகவை எதிர்த்துக்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் இத்தகைய அட்டுழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே தவெக எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!
எம்.ஜி.ஆர் பொன்மொழியோடு எச்சரிக்கை
இறுதியாக, திமுக திருந்துவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் தமிழக மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம் என்றார். மேலும், “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே” என்ற புரட்சித் தலைவரின் பொன்மொழியை நினைவுபடுத்தி, திமுகவின் இந்த கீழ்த்தரமான அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று விமர்சித்துள்ளார்.