AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மின் விநியோகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி.. கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை!

TNEB press release: தமிழகத்தில் நிலவி வந்த மின் விநியோகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிச்சந்தையிலிருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோடைக் காலத்தின் நீடிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட மின்னழுத்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய சிறப்புச் முகாund குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மின் விநியோகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி.. கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Sep 2026 10:23 AM IST

செப்டம்பர், 13: கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தில் தொடர்ச்சியான சீரற்ற தன்மையும், ஆங்காங்கே மின் தடைகளும் ஏற்பட்டு பொதுமக்களிடையே பெரும் அசௌகரியங்களை உருவாக்கின. குறிப்பாக இரவு நேரங்களில் நிலவிய குறைந்த மின்னழுத்தக் குறைபாடு தொடர்பாக நுகர்வோரிடமிருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இச்சூழ்நிலையில், மின் தேவையைச் சீராகச் சமாளிக்கவும், பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: ரேஸிங் சூட்டில் கையில் தேசியக் கொடியுடன் கெத்து காட்டிய முதல்வர் விஜய் – அஜித்.. ‘லி மான்ஸ் கப்’ ரேஸில் அபார சாதனை!!

மின் உற்பத்தி கணிசமாகக் குறைவு:

இந்த மின் விநியோகத் தடை மற்றும் மாறுபாடுகளுக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தியுள்ள மின்சார வாரியம், இந்த ஆண்டு கோடைக் காலம் எதிர்பாராத விதமாக நீண்ட நாட்களுக்கு நீடித்ததே மின் தேவை திடீரென அதிகரித்தற்குக் முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது. அதே வேளையில், காற்றின் வேகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்தது. இதன் விளைவாகவே சில இடங்களில் தொழில்நுட்ப ரீதியிலான மின்னழுத்தக் குறைபாடுகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை:

இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையிலிருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் நிலைமை முற்றிலும் சீரமைக்கப்பட்டு, நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்கட்டமைப்பில் ஏற்படும் திடீர் மாறுபாடுகளை மின்வாரியத் தலைமையின் உயர்மட்டக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டங்களுக்கு நடுவே சத்தமே இல்லாத கூட்டம்.. போட்டியாளர்களை வெளுத்துவாங்கப்போகும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!

இரவிலும் தடையற்ற மின்சாரம்:

மின் விநியோகப் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய சிறப்பு மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்தடை புகார்கள் மீது எந்தவித அலட்சியமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கவும், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகத் திட்டமிடப்படும் மின்தடைகளை முடிந்தவரை தவிர்க்கவும் களப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இரவிலும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வாரியம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் மின்வாரிய சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us