தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Minister Clarifies Power Shortage: தமிழகத்தில் பல இடங்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை இரவு இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 12 : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பல இடங்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை இரவு இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காற்றாலை மின்சாரம் தடைபட்டதே மின் வெட்டுக்கு காரணம் என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில் மின் வெட்டு குறித்து முதன்முறையாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!




மேலும், அவரது பதிவில் செப்டம்பர் 11, 2026 நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜபாளையத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மின் வெட்டு குறித்து ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க : “அன்புத் தாய்மார்களே”.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!
இதனையடுத்து உரையை முடித்துக் கொண்டு அவர் புறப்படத் தயாரானபோது அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சேத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், அதை சரிசெய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், அமைச்சர் அந்த மனுவை வாங்காமல் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வெட்டை ஏன் சரி செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தி திருப்பிஅனுப்பினர்.