அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம் – என்ன நடந்தது?
Speaker Rebukes Minister : தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து எதிர்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 18 :சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடரில் கடலூரில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழகர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டவ வந்தனர். இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சியினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம்
அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்வர் பரிந்துரைத்துள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்? வெளியான பரபரப்பு தகவல்




மேலும் பேசிய அவர், இந்த சம்பவத்துக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்ததுடன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உலக அளவில் ஒட்டுமொத்த தமிழரர்களின் ஒரே நம்பிக்கை முதல்வர் விஜய், தமிழர்களுக்கு எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் குரல் கொடுப்பவர் முதல்வர் விஜய் என்று பேசினார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இனி தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க முடியாது, யார் கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமாருக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர், அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!
இதற்கிடையில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படுமா என அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கவனம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர் கர்நாடகா அரசு அறிவித்துள்ள நிதி மிக மிக குறைவாகும். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார். இது தொடர்பாக பதிலளித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் கர்நாடகா வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தலா ரூ. 10 லட்சம் வழங்க முடிவெடுக்கப்படும் என்றார்.