கோயிலுக்கு சென்ற இடத்தில் காலணி காணாமல் போனால் என்ன செய்வீர்கள்? நீண்ட நேரம் தேடுவோம்... இல்லையென்றால் கிடைக்கவில்லை என விட்டுவிடுவோம். ஆனால் கோவாவைச் சேர்ந்த ஒருவர் தனது காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியின் உதவியை நாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கோவாவைச் சேர்ந்த சுபாங் போர்கர், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகால் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு வெளியே ஏராளமான காலணிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு நடுவே தனது காலணியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வித்தியாசமாக யோசித்த அவர், காலணிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார்.