இளைஞர் கன்னத்தில் அறைந்தது குறைந்தபட்ச பல பிரயோகம்.. எஸ்.ஐ.- இளைஞர் மோதல் சம்பவம் குறித்து காவல் துறை விளக்கம்!
Thanjavur Police Clarification Assault Youth : தஞ்சாவூரில் விசிகவினருக்கும், இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரஹீம் அந்த இளைஞரை தாக்கியது, பதிலுக்கு அந்த இளைஞர் தாக்கியது விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் தமிழ் தேசிய வளர்ச்சி மாநாடு தொடர்பாக தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதற்கு, விசிக நிர்வாகி லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆகாஷ் என்ற இளைஞருக்கும், விசிகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம், ஆகாசின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அந்த இளைஞரும் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் திருப்பி அடைந்தார். இதை தொடர்ந்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசாரை ஒருமையில் திட்டிய இளைஞர்
அதில், தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆகாஷ் என்ற இளைஞர் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், கட்சியில் இருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறாமல் இருப்பதற்கு, ஆய்வாளர் ரஹீம் தலையிட்டு ஆகாசை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதனை கேட்காத அந்த இளைஞர் தொடர்ந்து போலீசாரை உரிமையில் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி.. போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொடூர கொலை.. மையம் நிர்வாகி உள்பட 5 பேர் அதிரடி கைது!
குறைந்தபட்ச பல பிரகோயத்தை பயன்படுத்திய எஸ்ஐ
தொடர்ந்து, போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும், நிலைமை மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் உதவி ஆய்வாளர் ரஹீம் குறைந்தபட்ச பல பிரயோகத்தை பயன்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, அந்த இளைஞர் உடனடியாக உதவி ஆய்வாளர் ரஹீம் கன்னத்தில் அறைந்துள்ளார். அருகில் இருந்த சக போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த இளைஞரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையே உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது
மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரிந்த இடத்தில் தனது சூப்பர்வைசரிடம் தகாத வார்த்தைகள் மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சூப்பர்வைசர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, போலீசார், இளைஞர் ஆகாசை தேவை இன்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!