AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு – புதிய ஆய்வக கட்டடத்தையும் திறந்துவைப்பு

CM Vijay Inspects Aavin Milk Plant : சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட ஆய்வக துணை கட்டடத்தையும் முதல்வர் விஜய் திறந்துவைத்தார். இந்த நிலையில் முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு  – புதிய ஆய்வக கட்டடத்தையும் திறந்துவைப்பு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Oct 2026 11:33 AM IST

சென்னை, அக்டோபர் 7 : சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட ஆய்வக துணை கட்டடத்தையும் முதல்வர் விஜய் திறந்துவைத்தார். இந்த நிலையில் முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு

சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெய் போன்ற பொருட்கள் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்து ஆய்வகக் கட்டடத்தையும் திறந்துவைத்தார்.

இதையும் படிக்க : எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி – இருவர் கைது

அதனைத் தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட மத்திய மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் அக்டோபர் 6, 2026 இன்று திறந்துவைத்தார்.

அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருள்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 152 கோடியில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஒரு புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் பார்வையிட்டார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மாதவரம் பால் பண்ணையில்தான் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் விஜய் பல்வேறு இடங்களில் அடிக்கடி திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக எம்.சி.ராஜா மாணவர் விடுதி, பெரம்பூர் பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பேட்டைகள், கிண்டி மெட்ரோ, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சுற்றுலா பயணிகளுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ்.. புதிய அவதாரமெடுக்கும் குற்றாலம் மெயின் அருவி.. விரைவில் செம மாஸ் என்ட்ரி..!

குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருவதாக மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது சர்ச்சையானது. இதனையடுத்து கடந்த 2026 செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மின்சாரம் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் ஒரு பகுதியாக தற்போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அக்டோபர் 7, 2026 இன்று சென்னை மாவதரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்திலும் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us