AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

Sri Lanka Woman Arrested Nagai : நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை கப்பல் மூலம் போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற பெண்ணை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Oct 2026 07:32 AM IST

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான கடல் வழி பயணத்தில் சிவகங்கை என்ற கப்பல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால், இந்த கப்பலில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்வது வழக்கம் ஆகும். அதன்படி, சம்பவத்தன்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை கப்பல் புறப்பட தயாரானது. இதில், இலங்கை செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், குடும்பத்தினரோடு வந்திருந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவை போலியானது என்பது தெரிய வந்தது.

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண்

தொடர்ந்து, அந்த பெண்ணிடம் குடியுரிமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பெண் இலங்கையை சேர்ந்த ஹக்கீதா அபுஷாலி ( 34 வயது) என்பதும், இவர் சவுதி அரேபியாவின் வேலை பார்த்த போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் அவருடன் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2011- ஆம் ஆண்டு சுரேஷ் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பினார். அப்போது, ஹக்கீதா அபுஷாலியும் கடந்த 2015- ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்தனர்.

மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!

போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்ற பெண்

அங்கு, சுரேஷ் மற்றும் ஹக்கீதா அபுஷாலி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு, அதற்காக இந்தியாவில் போலியான ஆவணங்களை தயார் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலமாக தான் அந்த பெண் இலங்கைக்கு கப்பலில் செல்ல முயன்றனர். அப்போதுதான், குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ததில் ஹக்கீதா சிக்கி உள்ளார்.

நாகை டவுன் போலீசார் தீவிர விசாரணை

இதை தொடர்ந்து, ஹக்கீதா அபுஷாலியை நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அத்துடன் குடியுரிமை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நாகப்பட்டினம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலமாக இலங்கை செல்ல முயன்ற ஹக்கீதாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஈரோட்டில் பாய்ந்து வந்த கருப்பு நிற கார்.. வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. நூலிழையில் உயிர் தப்பியவர்களின் திக் திக் நிமிடம்!

Follow Us