AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமர் மோடியின் சென்னை விசிட்.. மெட்ரோ பயணம் முதல் இளையராஜா மையம் வரை.. முழு பிளான் இதோ!

PM Modi Visit Tamil Nadu Details : பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11- ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், பிரதமர் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை விசிட்.. மெட்ரோ பயணம் முதல் இளையராஜா மையம் வரை.. முழு பிளான் இதோ!
பிரதமர் நரேந்திர மோடி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Oct 2026 06:28 AM IST

பிரதமர் நரேந்திர மோடி வருகிற அக்டோபர் 11- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர உள்ளார். அங்கு, நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழக சுற்றுப்பயணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அக்டோபர் 11- ஆம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் பிரதமர் மோடி புறப்பட்டு 10:55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக காலை 11:30 மணிக்கு பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் இந்த ரயில் பயணத்தின் போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜயும் உடன் பயணிக்கிறார்.

ஐஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

மெட்ரோ ரயில் பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக காரில் பிற்பகல் 12:25 மணிக்கு சென்னை ஐஐடி- க்கு செல்ல உள்ளார். அங்கு பகல் 1:45 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். தொடர்ந்து, ஐஐடியில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி சுற்றிப் பார்த்து பார்வை இடுகிறார். அதோடு நாட்டின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க: காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2- ஆம் கட்ட பணிகள் தொடக்கம்

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2- ஆம் கட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கிறார். பின்னர், கோவையில் நடைபெறும் சங்கர நேத்ராலயாவின் பொன்விழா நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதோடு, சென்னை ஐஐடி வளாகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை உயர்திறன் மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதுடன், பல்வேறு மக்கள் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மாலையில் டெல்லி திரும்பும் பிரதமர் மோடி

அத்துடன், நிறைவடைந்த பணிகளையும் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளார். பின்னர், மாலை 3:30 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறார். அதன் பின்னர், சென்னை வர்த்தக மையம் செல்லும் அவர் ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளி பொன் விழாவில் பங்கேற்று விட்டு மாலை 5: 15 மணிக்கு காரில் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மேலும் படிக்க: விஜயை தொடர்ந்து தனுஷ்.. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு.. என்ன பெயர் தெரியுமா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Follow Us