AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!

DVAC Probe Sand Mining Scam : திமுக ஆட்சியில் ரூ. 4730 கோடி மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடிதம் அனுப்பிய நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் முதல் கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.

ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Oct 2026 21:27 PM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதித்த அளவைவிட பல மடங்கு கூடுதலாகவும், விதிகளை மீறியும் மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பான ஆதாரங்களையும் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், இதில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்பு துறை போலீசார் விசாரணை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2024- ஆம் ஆண்டு சட்ட விரோதம் மணல் திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் அப்போதைய தமிழக டிஜிபியிடம் அமலாக்கத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து சட்டபூர்வமான விசாரணை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான ஆதாரங்கள் சேகரிப்பு

அப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூலை 18- ஆம் தேதி மீண்டும் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே, சட்டவிரோத மணல் திருட்டு தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் ஐஐடி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிபுணர்கள் உதவியுடன், அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக துல்லியமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!

ரூ. 4730 கோடிக்கு சட்டவிரோத பணபரிவர்த்தனை

இதன் மூலமாக தமிழகத்தில் 28 ஆற்று மணல் வாரிகளில் எந்த அளவுக்கு ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை நவீன ஜியோ ஸ்கேனிங், தொழில்நுட்பங்கள் மூலமாக அளவிடப்பட்டுள்ளது. இதில், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டதும், இதன் மூலம் ரூ. 4,730 கோடிக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதும் உறுதி செய்யப்பட்டது. மணல் திருட்டுக்காக கனரக இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடம் இருந்து ஜிபிஎஸ் தரவுகள் பெறப்பட்டது முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு மணி நேரம் இயக்கப்பட்டது. எந்த நேரத்தில் மணல் அருளப்பட்டது போன்ற துல்லிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் கட்ட விசாரணை

ஜியோ பென்சிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமாக எந்திரங்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த தரவுகளை மணல் குவாரிகளின் ஜிபிஎஸ் எல்லைகளுடன், அனுமதிக்கப்பட்ட எந்திரங்கள் எண்ணிக்கையுடன் அமலாக்கத்துறை ஒப்பிட்டு பார்த்துள்ளது. இதில், விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் பழிக்கு பழி சம்பவம்… விசிக பிரமுகர் கொலையில் “திடுக்”.. கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!

Follow Us