AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜயை தொடர்ந்து தனுஷ்.. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு.. என்ன பெயர் தெரியுமா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Dhanush Tamilaga Ezhuchi Kazhagam Party : நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை தமிழக எழுச்சிக் கழகம் என பெயர் மாற்றி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயை தொடர்ந்து தனுஷ்.. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு.. என்ன பெயர் தெரியுமா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் தனுஷ்.Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Oct 2026 20:59 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை வலுப்படுத்துவதில் அண்மைக்காலமாக தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள அவர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தனது ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்ற இருப்பதாகவும், இதற்காக சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தனுஷ் தனது ரசிகர் மன்றத்துக்கு “தமிழக எழுச்சிக் கழகம்” என பெயர் மாற்றி புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயர் பதிவு

அதன்படி, தனது கட்சியின் பெயரான ” தமிழக எழுச்சி கழகத்தை” தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுவெளியில் தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று மாறி உள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் நடிகர் விஜய் முதல்வராக ஆகி உள்ளார். இந்த மாற்றமானது அவரைப் போன்று பிற நடிகர்களையும் அரசியலுக்கு வர தூண்டி உள்ளது. அந்த வகையில், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகியோர் அரசியலுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: Tamilnadu Puducherry By Poll : தமிழகம்- புதுச்சேரி இடைத்தேர்தல்.. விருவிருப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு.. இயந்திரங்களுக்கு “சீல்”

ரசிகர் மன்றமாக மட்டும் இருத்தல் கூடாது

இந்த நிலையில் தான், நடிகர் தனுஷ் அண்மையில் தனது பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக நடத்தி இருந்தார். அதில், ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார். அத்துடன், தனுஷ் ரசிகர் மன்றம் அனைத்து மக்கள் தரப்பிலும் சென்றடையும் வகையில் மன்ற நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்றும், சும்மா கூடினோம் என்று இருக்க வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், தனுஷின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டிருந்தனர்.

தலைவர் தனுஷ் என்ற வார்த்தையுடன் போஸ்டர்

அதில், வழக்கத்துக்கு மாறாக தலைவர் தனுஷ் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் வெளியான சில நாட்களில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தான் நடிகர் தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் வெளியான அறிக்கையில் தமிழக எழுச்சி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!

Follow Us