Tamilnadu Puducherry By Poll : தமிழகம்- புதுச்சேரி இடைத்தேர்தல்.. விருவிருப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு.. இயந்திரங்களுக்கு “சீல்”
Tamil Nadu -Puducherry By Election Polling Concludes : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எந்த விதமான இடையூறும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வாக்குகள் பதிவான இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 6- ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், அந்ததந்த தொகுதிகளை சேர்ந்த தகுதி உடைய வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். இதனால், காலை முதல் மாலை வரை ஒவ்வொரு தொகுதிகளிலும் விருவிருப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்கப்பதிவு சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற நிலையில், தற்போது மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அதிகாரிகள் சீல்
இதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து, அந்த இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமுக்கு (தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்ஆர்ஜி கல்லூரிக்கும், தட்டாஞ்சாவடியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேரு கல்லூரிக்கும், மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் கல்லூரிக்கும்) கொண்டு செல்லப்பட்டன. அங்கு, உள்ளூர் போலீசார், துணை ராணுவ படை வீரர்கள், கண்காணிப்பு கேமரா என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “என் தங்கைக்கு பதில் நான்தான் ஓட்டு போடுவேன்!”.. தாராபுரம் வாக்குச்சாவடியில் பரபரப்பை கிளப்பிய மூதாட்டி!!




3- ஆவது நாளில் வாக்கு எண்ணும் பணி
இன்று முதல் 3 நாட்கள் பாதுகாப்பில் இருக்கும் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அக்டோபர் 9- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அன்றைய தினம் காலை சுமார் 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதில், வெற்றி பெறும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் நடந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் 4 மாத ஆட்சியை எடை போடும் வகையில் இந்த தேர்தல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வருகின்றனர்.
எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி வாகை சூடுவார்
இதனால், ஒவ்வொரு கட்சியினர் மத்தியிலும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவிய நிலையில், எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி வாகை சூடப் போகிறார் என்பது 2 நாட்களில் தெரியவரும்.
மேலும் படிக்க: Maduranthakam ByElection Voting: விசில் சின்னத்துக்கு நேர கறுப்பு மை.. மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்..