AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!

Young Woman Ruckus Govt Bus : சென்னையில் நள்ளிரவில் அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

“இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!
பஸ்ஸில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Oct 2026 17:38 PM IST

சென்னை மாநகரத்தில் ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இயக்கப்பட்ட ஒரு அரசு பேருந்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்தில் அமர்வதற்கு சீட் கேட்பது தொடர்பாக சக பயணிகளுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மது போதையில் இருந்த அந்த இளம் பெண் தன்னை தட்டி கேட்ட சக பயணிகளை பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதில், இந்த பஸ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.

மது போதையில் இளம் பெண் ரகளை

இதை பார்த்த ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் அந்த பெண்ணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்தின் முன் பகுதியில் ஓட்டுனரின் இருக்கைக்கு அருகில் கண்ணாடி முன் அமர்ந்தவாறு கத்தி கூச்சலிட்டார். தொடர்ந்து, பெண் பயணி ஒருவர், அந்த இளம் பெண்ணிடம் இது தொடர்பாக தட்டிக் கேட்ட போது, அவரை அடிப்பதற்கு கை ஓங்கிய நிலையில், இருவருடைய வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மேலும் படிக்க: திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!

பெண்ணின் தலை முடியை இழுத்து உருண்டு கைகலப்பு

அப்போது, அந்த பெண் பயணியின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளம் பெண் கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால், பேருந்தின் உள்ளே இரு பெண்களும் உருண்டு பிரண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த இளம் பெண் போலீசை கூப்பிடு.. என்ன வீடியோ எடுக்கியா. ஓகே பா செல்ல குட்டி தாராளமா வீடியோ எடுத்துக்கோ என்று மது போதையில் உளறுகிறார். இந்த சம்பவத்தை சக பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை

அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்ட இளம் பெண்ணின் வீடியோக்கள் அடிப்படையில் சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அந்த பெண் யார். அவர் எங்கிருந்து பேருந்தில் ஏறினார் என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மதுபோதையில் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரத்தில் விதிமீறல்.. வேட்பாளர்கள் செயலால் அதிருப்தி.. தேர்தல் ஆணைய புகாரால் சிக்கலில் தவெக?

Follow Us