AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகம்- தாராபுரத்தில் விதிமீறல்.. வேட்பாளர்கள் செயலால் அதிருப்தி.. தேர்தல் ஆணைய புகாரால் சிக்கலில் தவெக?

Complaint Filed Election Commission Against TVK : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் நிர்ணயித்த தொகையை விட கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞ ர் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார் .

மதுராந்தகம்- தாராபுரத்தில் விதிமீறல்.. வேட்பாளர்கள் செயலால் அதிருப்தி.. தேர்தல் ஆணைய புகாரால் சிக்கலில் தவெக?
முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Oct 2026 21:52 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ( ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான ஜோசப் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரத்தின் போது அதிக அளவில் செலவு செய்துள்ளதாக மதுரையை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அயம்லன் என்பவர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போதும், சாலை வலம் சென்ற போதும் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்த தவெகவினர்

சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைத்தது, வெளியூர்களில் இருந்து லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆட்களை வரவழைத்தது, உயரமான கொடி கம்பங்கள் நிறுவியது மற்றும் தாரை தப்பட்டைகளுடன் வரவேற்பு அளித்தது என்பன உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ. 10 லட்சம் மட்டுமே செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!

தவெக வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்

ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும், தேர்தல் விதிமுறைகளையும் மீறி தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரத்துக்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் வீடியோ குழுக்கள் மூலம் பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, இந்த செலவுகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக அளவு பணம் செலவு செய்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அயல்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த மனு அவசரமாகவும் கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் மீது தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!

Follow Us