AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் யார்? முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா.. ஆர்.எஸ்.பாரதி கேட்ட கேள்வி!

DMK Organising Secretary R S Bharathi : தாராபுரத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மாட்டு வண்டியை ஓட்டிய நபர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். அவரை முதல்வர் காப்பாற்றுகிறாரா என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கேள்வியெழுப்பினார்.

விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் யார்? முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா.. ஆர்.எஸ்.பாரதி கேட்ட கேள்வி!
விஜய்யுடன் மாட்டு வண்டி ஓட்டிய நபர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Oct 2026 19:49 PM IST

முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டிய ஓட்டியவர் போலீசாரால் தேடப்படும் நிலையில், அவரை முதல்வரே காப்பாற்றுகிறாரா என்று திமுக அமைப்பு செயலர் ஆர். எஸ். பாரதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தாராபுரம் தொகுதியில் 2- ஆவது முறையாக முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, வராத முதல்வர் விஜய், இந்த தொகுதியில் 2 முறை பிரச்சாரம் மேற்கொள்ள என்ன காரணம். தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர் விஜய் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்துள்ளார். டீ குடிப்பது… டிராக்டர் ஓட்டுவது… என அவர் விளம்பரத்தை தேடிக் கொண்டிருந்தார். முதல்வர் விஜய் மாட்டுவண்டியில் பயணம் செய்த போது, அவருடன் இருந்த நபர் யார். அசோக் என்ற நபர் தான் மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார்.

மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி

அவர் மீது தவெகவினரால் புகார் அளிக்கப்பட்டுள்ள ஒரு தேடப்படும் குற்றவாளி ஆவார். இது போலீசாருக்கு தெரியாமல் எப்படி வந்திருக்க முடியும். இந்த புகார் தொடர்பான செய்திகளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்துள்ளோம். உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தேடப்படும் குற்றவாளி முதல்வர் உடன் தான் இருக்கிறார் என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி குழந்தைகளை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்துள்ளார். அவர் மீது தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Tamil Nadu ByElection 2026: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு.. மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை நடக்கும் வாக்குப்பதிவு.. களம் எப்படி இருக்கும்?

திமுகவை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பார்த்து எதற்காக பயப்படுகிறீர்கள். எதற்காக அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். கடந்த 4 மாதங்களாக தவெக அரசு மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு பேசி வாங்கி உள்ளனர். ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏக்களில் ஒருவரை கூட அவர்களால் தொட்டு கூட பார்க்க முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏக்களை தான் பறிக்க முடியவில்லை. அவைத்தலைவர் வீட்டில் இருக்கிற முருங்கைக்கையாவது பறிக்கலாம் என்றுதான் பறித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழக தொண்டனை முதல்வர் விஜயாலும், சட்டத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும், எங்கள் தலைவர் மு. க. ஸ்டாலின் மீதும், உதயநிதி ஸ்டாலின் மீதும் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்யும் நீங்கள் இவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. போலீசார் பதிவு செய்யும் வழக்கு குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் கவலைப்படாது. ஆனால், ஒரு நியாயம் இருத்தல் வேண்டும். போலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி தான் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறார். அவருக்கு அருகில் முதல்வர் நின்று கொண்டு வருகிறார். அப்படி என்றால் முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!

Follow Us