AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!

Marxist Secretary Shanmugam : விசைத்தறி தொழிலாளர்கள் வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியவற்றை விரிவாக பார்க்கலாம்.,

வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!
விசைத்தறி தொழிலாளர்களுக்காக களமிறங்கிய சண்முகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Oct 2026 18:08 PM IST

தமிழக அரசின் புதிய ரக வேஷ்டி மற்றும் சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க கோரி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறுகையில், தமிழக அரசு இலவச சேலை உற்பத்தி திட்டத்தில், ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 29 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 4,000 பெடல் தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு புதிய ரக சேலைகள் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்துள்ளது.

வாழ்வாதாரம் இழந்து வாடி வரும் விசைத்தறி தொழிலாளர்கள்

ஏற்கனவே உற்பத்தி செய்த ஜனதா ரக சேலைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலை ரூ. 103.80 ஆகும். தற்போது புதிய ரக சேலைக்கு நிர்ணயம் செய்த கூலி ரூ. 114.80 ஆகும். ஆனால், புதிய ரகத்துக்கு ஒரு சேலை நெசவு செய்வதற்கு ரூ. 250 வரை செலவாகும் எனவும், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 சேலைகள் மட்டுமே நெசவு செய்ய வாய்ப்புள்ளது எனவும் விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!

தமிழக அரசு நடவடிக்கையின்றி வேடிக்கை பார்க்கிறது

புதிய ரக சேலைக்கு கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி நெசவாளர்கள் கைத்தறித்துறை அமைச்சர், அரசின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் எந்தவிதமான பயனும் இல்லை. இதனால், 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. எனவே,

விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

  • விசைத்தறி தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான புதிய ரக சேலைக்கு ரூ. 250 கூலி வழங்க வேண்டும்.
  • இதற்கான உபகரணங்கள் மற்றும் செலவினங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
  • வேலை இல்லா காலத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • கொள்முதல் செய்யாமல் இருக்கும் பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
  • புதிய ரகத்தால் பழைய ரகத்தில் பணி செய்த பசை போடுபவர்கள், நூல் சுற்றுபவர்கள், பாவோடிகளுக்கு மாற்று ரகம் வழங்கி பணிகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!

Follow Us