AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!

Trichy Smuggling Ganja : ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 25 கிலோ மதிப்பிலான 22 கிலோ கஞ்சாவை சமயபுரம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்தனர்.

திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!
கஞ்சா கடத்தலில் கைதானவர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Oct 2026 17:31 PM IST

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்த 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து திருச்சி மார்க்கமாக புதுச்சேரி மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அதிக அளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் இன்று திங்கள் கிழமை ( அக்டோபர் 5- ஆம் தேதி) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சமயபுரம் போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சாக்கு மூட்டைகளில் கஞ்சா கடத்தல்

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், சாக்கு மூட்டைகளை போலீசார் சோதனை செய்ததில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் வந்தவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஜோயல் ( 24 வயது), அரவிந்த் ( 31 வயது), திருச்சியை சேர்ந்த ஒண்டி முத்து குமார் ( 46 வயது), காமராஜ் ( 29 வயது) மற்றும் கடலூரை சேர்ந்த இதய பாலன் ( 33 வயது) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!

வெளிமாநில எல்லை பகுதியிலிருந்து கஞ்சா கடத்தல்

இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் எல்லைப் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரி மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, ரூ. 25 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 இரு சக்கர வாகனங்கள், 5 செல்போன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் உறக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட 5 பேர்

இதைத் தொடர்ந்து, 5 பேர் மீதும் கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவு கஞ்சா கடத்தப்படுவதால் தமிழகத்தில் கஞ்சா புழக்கம பரவலாக காணப்படுகிறது.

மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!

Follow Us