சென்னையை கடந்துச் சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்.. வியப்படைந்த மாணவர்கள், பொதுமக்கள்!
ISS Crosses Chennai Sky | விண்வெளியிலேயே தங்கி, விண்வெளி தொடர்பான ஆய்வுகளை சர்வதேச விண்வெளி நிலையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், அது சென்னையை கடந்துச் சென்ற நிலையில், அதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு வியப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை, அக்டோபர் 05 : சர்வதே விண்வெளி நிலையம் (ISS – International Space Station) சென்னையை கடந்துச் சென்ற நிலையில், அதனை கண்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அரிய நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிலையில், சர்வதே விண்வெளி நிலையம் சென்னையை கடந்து சென்ற நிகழ்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையை கடந்துச் சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்
பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர்கள் உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அது மணிக்கு சுமார் 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து வருகிறது. இந்த விண்வெளி நிலையில், வெறும் 90 விநாடிகளில் பூமியை சுற்றி வரும். இவ்வாறு, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒருமுறை அது பூமியை சுற்றிக்கொண்டு வருகிறது. இந்த விண்வெளி நிலையம் பார்வையாளருக்கும், சூரியனுக்கும் இடையே நேரடியாக கடந்துச் செல்லும்போது அது சூரியனின் வட்டில் சிறிய, வேகமாக நகரும் நிழல் போல தோன்றும்.
இதையும் படிங்க : தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும்… – பரப்புரை முடிந்த நிலையில் முதல்வர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை




குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய நிகழ்வு
இந்த நிகழ்வு குறிப்பிட்ட ஒரு குறுகிய புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய நிகழ்வாக உள்ளது. அதுவும், வெறும் ஒருசில விநாடிகளில் மட்டுமே இந்த நிகழ்வு தோன்றும். அந்த வகையில் தான், நேற்று (அக்டோபர் 04, 2026) சென்னை பாலவாக்கம் பகுதியில் காலை சரியாக 7.27 மணிக்கு சூரியனை சர்வதேச விண்வெளிம் மையம் கடந்துச் சென்றது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.
இதையும் படிங்க : மதுரையில் 4 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை – கொலைக்கான காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த அரிய நிகழ்வை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக கோளரங்கள் சார்பில் முறையான சோலார் பில்டர் பொருத்தப்பட்ட சிறப்பு உபகரணங்கள் மூலம் இந்த நிகவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.