AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் 4 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை – கொலைக்கான காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

4 Year Old Boy Murdered in Madurai : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, குவாரி பள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் 4 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை – கொலைக்கான காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Oct 2026 21:16 PM IST

மதுரை, அக்டோபர் 4 : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, குவாரி பள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் 4 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை

திருமங்கலம் அருகே பாரப்பத்தி கிராமத்தைச் சேர்ந்த முருகன், நாச்சம்மாள் தம்பதிக்கு இரண்டு மகள்களும், மோகன் என்கிற 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3, 2026 நேற்று முருகன் வேலைக்கு சென்றிருக்கிறார். நாச்சம்மாள் வழக்கம்போல ஆடு மேய்க்கும் பணிக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, மகள்கள் இருவர் மட்டுமே வீட்டில் இருந்திருக்கின்றனர். அவர்களது 4 வயது மகன் மோகன் அங்கு இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோதும் சிறுவனை யாரும் பார்க்கவில்லை என்றே பதில் வந்தது. இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

இதையும் படிக்க : தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி – தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

இதுகுறித்து முருகன் கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகனும், முருகனின் உறவினருமான மணி , அன்றிரவு சாக்கு மூட்டை ஒன்றைச் சுமந்து சென்றதைப் பார்த்ததாக சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மணியை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தொடக்கத்தில் சிறுவனைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மணி மறுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர் விசாரணையில், சிறுவனைக் கொன்று குவாரி பள்ளத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை அழைத்துச் சென்று போலீசார் நடத்திய சோதனையில், குவாரி பள்ளத்தில் சாக்கு மூட்டைக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மோகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனயடுத்து எஸ்பி தேவநாதன், திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிறுவனின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, மணி தனது வீட்டின் பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிளேடால் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலைச் சாக்குப் பையில் கட்டி, தோளில் சுமந்து சென்று குவாரி பள்ளத்தில் வீசிவிட்டு, எதுவும் நடக்காதது போல வீட்டுக்கு வந்து தூங்கியதாக போலீசாரிடம் மணி தெரிவித்திருக்கிறர்.

இதையும் படிக்க : காணாமல் போன 4 பள்ளி மாணவர்கள் குரோம்பேட்டை ஏரியில் சடலமாக மீட்பு – பரபரப்பு சம்பவம்

கொலைக்கான காரணம் குறித்து மணி முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுவனின் குடும்பத்துடன் முன்விரோதம் இருந்ததாகவும், கஞ்சா போதையில் இச்செயலில் ஈடுபட்டதாகவும் முதலில் சொன்னதாகவும், பின்னர் நடந்த விசாரணையில், தனது பெரியப்பா மகளுக்கும் சிறுவனின் சித்தப்பாவுக்கும் இடையே இருந்த தொடர்புக்குப் பழிவாங்கவே சிறுவனை கொலை செய்ததாக அவர் கூறியதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Follow Us