AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கம்? வெளியான பரபரப்பு தகவல்

Thai Maman Gold Ring Scheme : மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 28, 2026 இன்று துவங்கி வைத்தார். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யை பார்க்க வந்த 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கம்? வெளியான பரபரப்பு தகவல்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Sep 2026 15:06 PM IST

மதுரை, செப்டம்பர் 28 : மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 28, 2026 இன்று துவங்கி வைத்தார். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்களும் தவெக தொண்டர்களும் அந்த பகுதியில் குவிந்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கம்?

மதுரை ராஜாஜாி அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் கடந்த ஜூன் 22, 2026 முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 1.28 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இந்த திட்டத்துக்காக தனி விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் விஜய், பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி ரிங் ரோடு ஆகியவற்றின் வழியாக ரோட் ஷோ சென்றார். வழி நெுக அவருக்கு ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிக்க : ஒரே ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த வழக்கு.. தவெக எம்.எல்.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த நிலையில் அவரைக் காண மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் குவிந்தனர். இந்த நிலையில் நீண்ட நேரமாக வெயிலில் நின்றதால் பொதுமக்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மதுரை அரசு ஆஸ்பத்திரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற விழாவில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் பிற அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த 25 குழந்தைகளுக் தன் கைகளால், தங்க மோதிரங்களை அணிவித்தார். மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,40 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.

இதையும் படிக்க : “ஜெயலலிதா கூட இப்படி பண்ணல”.. முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

பின்னர் அங்கிருந்து மகாத்மா காந்தி அருங்காட்சியகத்துக்கு சென்ற முதல்வர் விஜய் , அங்கு மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் அவரது ஆவணப்படத்தை முதல்வர் கண்டு ரசித்தார். மேலும் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது காந்தியின் உபதேசங்களில் ஒன்றான, ‘நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம்.. முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்’ என்கிற வாசகத்தை நிர்வாகி ஒருவர் காண்பித்தார்.

Follow Us