சைக்கிள் ஊர்வலம்.. கீழே விழுந்த தேனி எம்.எல்.ஏ.. தாராபுரத்தில் பரபரப்பு!
Jeganath Misra Falls From Cycle | தேனி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, தாராபுரத்தில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அப்போது சைக்கிளில் சென்ற அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம், செப்டம்பர் 28 : தாராபுரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்ற தேனி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சைக்கிள் ஊர்வலம் – கீழே விழுந்த தேனி எம்.எல்.ஏ
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தேனி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு




கடும் அதிர்ச்சிக்கு உள்ளான தொடண்டர்கள், அமைச்சர்கள்
ஊர்வலம் தொடங்கிய நிலையில், அவர்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் சென்றுள்ளனர். அப்போது ஜெனநாத் மிஸ்ரா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அனைவரும் இனைத்து மிஸ்ராவை தூக்கிவிட்டனர்.
இதையும் படிங்க : மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுவுக்கு.. கூட்டு சதி – அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்
பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – எந்த ஆபத்தும் ஏற்படவில்லை
சைக்கிள் ஊர்வலத்தில் சென்ற தேனி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, தவற் கீழே விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதில் மிஸ்ராவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான், ஜெனநாத் மிஸ்ரா சைக்கிள் ஊர்வலத்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.