AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஏரியின் சுமார் 8 ஏக்கர் பரப்பிலிருந்து 45 லட்சத்து 7,258 கன அடி அளவிலான ஏரிப்படுக்கை மண் எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 444 அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2026 17:20 PM IST

செப்டம்பர் 27, 2026: திருவண்ணாமலை அருகே மலப்பம்பாடி ஏரியில் விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் எ.வ. குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்காக மண் எடுக்கப்பட்டதாக புகார்

மலப்பம்பாடியில் கடந்த 2025 டிசம்பர் மாதம் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ‘கலைஞர் திடலில்’ நடைபெற்றது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் அப்போதைய அமைச்சராக இருந்த எ.வ. வேலு இருந்தார். தனது பதவியைப் பயன்படுத்தி, மாநாட்டுப் பணிகளுக்காக மலப்பம்பாடி ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆர்டிஐ சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த உத்தரவு ரத்து: விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழக அரசு நடவடிக்கை

சுரங்க விதிகளின்படி, பொது பயன்பாட்டுக்காக ஏரிகளில் இருந்து அதிகபட்சமாக ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மலப்பம்பாடி ஏரியின் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி, அதாவது 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை மண் தோண்டி எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8.22 கோடி வருவாய் இழப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஏரியின் சுமார் 8 ஏக்கர் பரப்பிலிருந்து 45 லட்சத்து 7,258 கன அடி அளவிலான ஏரிப்படுக்கை மண் எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 444 அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுவுக்கு.. கூட்டு சதி – அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..

அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு

மண் எடுக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் பங்கும் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விதிமீறல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தங்களது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ. குமரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மண் எடுக்கப்பட்ட அளவு, அரசுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் இழப்பு மற்றும் அதிகாரிகளின் பங்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us