AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுவுக்கு.. கூட்டு சதி – அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..

மதுராந்தகம் தொகுதியை திமுகவுக்கும், தாராபுரம் தொகுதியை அதிமுகவுக்கும் சாதகமாக வைத்துக்கொள்ள இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார். “திமுகவுக்கு ஓட்டு போடுங்கள், இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள்; விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டாம்” என பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுவுக்கு.. கூட்டு சதி – அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2026 16:31 PM IST

செப்டம்பர் 27, 2026: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். இதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேற்று தாராபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. 29ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..

விவசாயிகளுடன் ஆலோசனை:

தாராபுரம் அருகே பூளவாடி பகுதியில் உப்பாறு அணை தொடர்பாக விவசாயிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற தவறான பிம்பத்தை திமுகவும் அதிமுகவும் இணைந்து உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

தாராபுரம் மக்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிக்காதது குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும், இந்த முறை அக்கட்சிக்கு வாக்களிக்கப் போவதாகவும் கூறி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், தங்களது வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் என்றும் அவர் கூறினார்.

திமுக–அதிமுக மீது அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு:

மதுராந்தகம் தொகுதியை திமுகவுக்கும், தாராபுரம் தொகுதியை அதிமுகவுக்கும் சாதகமாக வைத்துக்கொள்ள இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார். “திமுகவுக்கு ஓட்டு போடுங்கள், இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள்; விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டாம்” என பிரச்சாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஆர்டிஐ சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த உத்தரவு ரத்து: விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழக அரசு நடவடிக்கை

மேலும், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படுவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும், நேற்று ஏற்பட்டது மைக் தொடர்பான பிரச்சினை மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குகள் விற்பனைக்கு இல்லை என்பதை இந்த இடைத்தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Follow Us