AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. 29ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..

Rainfall Alert: சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37–38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27–28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை மாலை/இரவில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. 29ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2026 14:45 PM IST

செப்டம்பர் 27,2026: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நேற்று (செப்.26) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (செப்.27) அதிகாலை 5.30 மணியளவில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (செப்.27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செப்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: கரூர் பெருந்துயரத்தின் முதலாண்டு நினைவு நாள்.. கருப்பு உடை அணிந்து 41 பேருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

செப்.29 அன்று ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். செப்.30 அன்று நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்.1 அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.2 மற்றும் 3ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, செப்.27 முதல் அக்.1 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.

மேலும் படிக்க: துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தகவல்கள் இனி இரகசியம்?.. RTI வரம்பிலிருந்து சட்ட ஒழுங்குப் பிரிவு நீக்கம்.. !!

சென்னையில் மழைக்கு வாய்ப்பா?

இன்று மாலை அல்லது இரவு நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37–38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27–28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை மாலை/இரவில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow Us