AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தகவல்கள் இனி இரகசியம்?.. RTI வரம்பிலிருந்து சட்ட ஒழுங்குப் பிரிவு நீக்கம்.. !!

RTI Exemption Law and Order: தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கும் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உளவு மற்றும் பாதுகாப்புப் பணிகளைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சாதி-மத மோதல்கள் மற்றும் காவல் மரணங்கள் தொடர்பான தகவல்கள் இனி ஆர்டிஐயில் கிடைக்காது.

துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தகவல்கள் இனி இரகசியம்?.. RTI வரம்பிலிருந்து சட்ட ஒழுங்குப் பிரிவு நீக்கம்.. !!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Sep 2026 12:49 PM IST

சென்னை, செப்.27: தமிழ்நாடு அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான மற்றும் விவாதத்திற்குரிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கி வரும் சட்ட ஒழுங்குப் பிரிவுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்களித்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உளவு மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அமைப்பாக இத்துறை செயல்படுவதைச் சுட்டிக்காட்டி இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சட்ட ஒழுங்கு தொடர்பான முக்கிய அரசாங்கக் கோப்புகள் மற்றும் அறிக்கைகளை இனி ஆர்டிஐ மூலம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: “ஆறாத ரணம், தீராத வேதனை!”.. கரூர் துயர சம்பவத்தின் முதலாண்டு நினைவில் முதல்வர் விஜய் உருக்கம்!!

ஆர்டிஐ விலக்கின் கீழ் வரும் முக்கிய விவகாரங்கள்:

அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, பொதுத்துறையின் சட்ட ஒழுங்குப் பிரிவு கையாளும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் இனி ஆர்டிஐ வரம்பிற்குள் வராது. குறிப்பாக, சாதி மற்றும் மத மோதல்கள் தொடர்பான அறிக்கைகள், சட்ட ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையங்கள் அமைப்பது மற்றும் அதன் பரிந்துரைகள், மாதாந்திர சட்ட ஒழுங்கு ஆய்வுக் கூட்டங்களின் விவரங்கள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், காவல் மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான கோப்புகளும் இனி பொதுமக்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

பாதுகாப்பு காரணங்களால் நடவடிக்கை:

மாநிலத்தின் பாதுகாப்பு, உளவுப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உணர்வுப்பூர்வமான தகவல்கள் பொதுவெளிக்குக் கசிவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத்துறை சட்ட ஒழுங்குப் பிரிவானது பல்வேறு முக்கியமான உளவுத் தகவல்களைச் சேகரித்து, அதனை உயர் அதிகாரிகளுக்கும் அமைப்புகளுக்கும் கோப்புகளாக அனுப்பி வைக்கும் முதன்மை அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால், இத்துறை கையாளும் இரகசியத் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த சிறப்பு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாணை தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இதுதான் காரணம்!”.. உண்மையை உடைத்துப் பேசிய திருமாவளவன்!!

அரசியல் ரீதியான விவாதங்கள்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை தகவல் உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய உதவும் ஆர்டிஐ சட்டத்தின் நோக்கத்தையே இத்தகைய விலக்குகள் பலவீனப்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் இந்த அதிரடி முடிவும், அதற்கான காரணங்களும் தற்போது அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Follow Us