AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இதுதான் காரணம்!”.. உண்மையை உடைத்துப் பேசிய திருமாவளவன்!!

VCK DMK Coalition Exit: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணங்கள் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். பதவிக்காகவோ அல்லது அதிகார ஆசைக்காகவோ இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், வலதுசாரி சக்திகள் தவெகவை ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும், சனாதன எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தவுமே இந்த முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இதுதான் காரணம்!”.. உண்மையை உடைத்துப் பேசிய திருமாவளவன்!!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Sep 2026 08:46 AM IST

செப்டம்பர், 27: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாகத் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில், இந்த முடிவு எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன என்பது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். பதவி ஆசைக்காகவோ அல்லது சுயநல அரசியல் கணக்குகளுக்காகவோ விசிக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், காலத்தின் கட்டாயத்தாலும் கொள்கை சார்ந்த பொறுப்புணர்வோடுமே இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: கருப்பு முருகானந்தத்திற்கு சிக்கல்.. 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை!

காலத்தின் கணக்குகள் குறித்து விளக்கம்:

திமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துப் பேசிய திருமாவளவன், “நாங்கள் பதவிக்காகவோ, பவிசுக்காகவோ அல்லது அதிகார வேட்கைக்காகவோ அணி மாற வேண்டும் என்று முடிவெடுத்து இந்த நிலையை மேற்கொள்ளவில்லை” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். காலம் சில கணக்குகளைப் போடும்போது அதற்கு ஏற்பவே மாற்றங்கள் நிகழ்கின்றன என்றும், இந்த விஷயத்தில் யார் மீதும் தனிப்பட்ட முறையில் பழி சுமத்த விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற மற்ற கட்சிகளும் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கான காரணங்களைச் சான்றோர் பெருமக்கள் ஆராயட்டும் என்று தெரிவித்துள்ளார்.

வலதுசாரி சக்திகள் தொடர்பான அரசியல் வியூகம்:

தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய திருமாவளவன், வலதுசாரி சக்திகள் தவெகவை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான சூழல் நிலவியதாக எச்சரித்துள்ளார். சனாதன எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தவும், தவெகவை வலதுசாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவததைத் தடுக்கவும் வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு விடுதலைச் சிறுத்தைகள் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி அரசு அமையும் என்பதும், அதில் விசிக ஒரு முக்கியமான அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் என்பதும் கட்சியின் நீண்டகாலக் கனவாக இருந்து வந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?

தலைமைக்கு எதிரான அவதூறுகள்:

தேர்தலுக்குப் பிறகு விசிக தலைமைக்கு எதிராகவும், தனது நம்பகத்தன்மையைக் குலைக்கும் நோக்கிலும் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டதாகத் திருமாவளவன் குற்றம்சாட்டினார். ஆனால், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நடத்திய உளுந்தூர்பேட்டை மாநாட்டின் பிரம்மாண்ட வெற்றி அந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளதாகக் கூறினார். மாநாட்டின் வெற்றியையும், தொண்டர்களின் கட்டுப்பாட்டையும் பற்றிப் பேசாமல், மேடையில் ஏற்பட்ட நெரிசலை மட்டுமே ஊடகங்களும் சில தரப்பினரும் திசைதிருப்பிப் பேசியதாக அவர் கவலை தெரிவித்தார். திருமாவளவனின் தலைமை நிலைபெற்றுவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே சிலர் இத்தகைய உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்பதே இதற்குரிய சரியான பதிலாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Follow Us