AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?

Udhayanidhi Criticized CM Vijay : தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்து முதல்வர் விஜய் குறித்து வந்த வார்த்தைக்கு எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தால் கூட்டத்தில் சிரிப்பலை நிலவியது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?
உதயநிதி , முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Sep 2026 19:42 PM IST

தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சுகுணாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ( செப்டம்பர் 26- ஆம் தேதி) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக சென்று விட்டனர். கூட்டணி கட்சியினர் சிலர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு சென்றனர். சிலர் முதுகில் குத்தி விட்டு சென்றனர். தவெக ஆட்சி அமைத்ததும் அனைத்து கட்சி தலைவர்களின் வீட்டுக்கும் முதல்வர் விஜயே சென்று ஷோபா டெலிவரி செய்தார்.

தவெகவ வேட்பாளர் சத்யபாமா இல்லை பெட்டி பாமா

வாக்குக்கு பணம் கிடையாது.. எம்எல்ஏக்களை தூக்குவதே தமிழக வெற்றி கழகத்தின் பாணி ஆகும். சத்யபாமா என்ற பெயர் தற்போது பெட்டி பாமா என்று மக்கள் மாற்றி உள்ளனர் அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 7 எம்எல்ஏக்களை பெட்டி கொடுத்து தவெக தலைமை தூக்கி உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் திமுக எம்எல்ஏக்களை பார்த்தால் வழக்கு பதிவு செய்கிறார். அதிமுக எம்எல்ஏக்களை பார்த்தால் பெட்டி கொடுத்து கட்சியில் சேர்த்து விடுகிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!

கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து வந்த வார்த்தை

அப்போது, கூட்டத்தில் இருந்து முதல்வர் விஜயின் லண்டன் பயணம் குறித்து ஒருவர் கருத்து தெரிவித்தார். இதற்கு, உதயநிதி ஸ்டாலின் நீங்கள் ஏதாவது சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்.. அந்த ஆள் என் மீது வழக்கு பதிவு செய்து தஞ்சாவூருக்கு இழுத்து சென்று விடுகிறார்… என்று நகைச்சுவையாக கூறினார். இதனால், கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. கடந்த முறை தண்ணீர் வரவில்லை என்று கூறினேன். அதற்கு முதல்வருக்கு கோபம் வந்துவிட்டது. சபாநாயகர் ஆக்சன் சொன்னால் விஜய் நடிக்க தொடங்கி விடுகிறார். இது சட்டமன்றமா அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டா என்று தெரியவில்லை.

சட்டமன்றம் பிக் பாஸ் நிகழ்ச்சியாக மாறிவிட்டது

எம்எல்ஏக்கள் முதல் சபாநாயகர் வரை பாடல் தான் பாடுகிறார்கள். இதனால், நாங்கள் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று தெரியவில்லை என்று தெரிவித்தேன். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வாயே திறந்து பேசியதாக சரித்திரமே இல்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். சட்டமன்றம் பிக் பாஸ் நிகழ்ச்சி போல மாறிவிட்டது. ஒரு எம்எல்ஏ காதல் தோல்வி குறித்து பேசுகிறார். ஆளுங்கட்சிக்கு தகுந்த பாடம் புகடுங்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!

Follow Us