AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!

Gem Veeramani Case : ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் , கூடுதலாக 7 காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்து உள்ளார் .

ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!
ஜெம் வீரமணி வழக்கில் எஸஐடி குழு விசாரணை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Sep 2026 18:17 PM IST

தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதில், கூடுதலாக 7 காவல் உதவி ஆணையர்களை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை தீவிர படுத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில், சென்னை மேற்கு சட்டம்- ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் துறை தலைமை அலுவலக ஊடக தொடர்பு அலுவலர் முத்தரசி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகிய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

எஸ்ஐடி குழுவில் கூடுதலாக 7 உதவி ஆணையர்கள்

இவர்களுடன் சேர்த்து கூடுதலாக 7 காவல் உதவி ஆணையர்கள் சிறப்பு புலனாய்வு குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் எஸ்ஐடி குழு விசாரணைக்கு உதவியாக பணிபுரிய உள்ளனர். இவர்கள் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த குழுவானது தனியாக விசாரணை மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலிடம் சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!

வீரமணியை விடுப்பிப்பதற்காக ரூ. 70 கோடி லஞ்சம்

இதனிடையே, ஜெம் வீரமணியை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கவும், இந்த வழக்கை மூடி மறைக்கவும் 2025- ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு ரூ. 70 கோடி வழங்கப்பட்டதாகவும், இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்த ஜெம் வீரமணிக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் போலீசாரின் விசாரணை தெரிய வந்தது.

ஜெம் வீரமணி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை

இதில், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள காரணத்தால், இந்த விவகாரத்தில் சென்னை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து தனியாக வழக்கு பதிவு செய்து பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

Follow Us