AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

ED Investigate Gem Veeramani Case : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற புகார் காரணமாக அமலாக்கத்துறை இதில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசு அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!
ஜெம் வீரமணி வழக்கில் அமலாக்கத்துறை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Sep 2026 19:12 PM IST

தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி கைதான வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் பிரபல தொழிலதிபராக இருந்து வரும் ஜெம் வீரமணி பல ஆண்டுகளாக சுமார் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெம் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி ரொக்கம் கைமாற்றம்

இந்த சம்பவத்தில் வழக்கை மூடி மறைப்பதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி கைமாறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. அதன்படி, குற்ற செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணம் மற்றும் குற்றத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட பணம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

மேலும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

விசாரணை வளையத்துக்குள் அரசு அதிகாரிகள்

அந்த வகையில், ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் அதிகாரிகளை விசாரணை வளையத்தில் கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள், அதற்கான முகாந்திரம் கிடைத்தால் தொடர்புடைய அரசு மற்றும் காவல் அதிகாரிகளை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

விரைவில் விசாரணையில் இறங்குகிறது அமலாக்கத்துறை

தற்போது வரை ஜெம் வீரமணி வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்ற வழக்காக இருந்து வந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்றம் காரணமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அமலாக்கத்துறை விரைவில் விசாரணையை கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கை கையாண்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலாகவும், அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் மற்றும் அதிரடி கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!

Follow Us