AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி… முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி பேச்சு!

CM Vijay Speech In Madhuranthakam : முன்னாள் முதல்வர்களான எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா போல எனக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் எதிரி என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அ வர் தெரிவித்தார் .

எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி… முதல்வர் ஜோசப் விஜய்  அதிரடி பேச்சு!
முதல்வர் விஜய் (கோப்புப்படம்)
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 25 Sep 2026 16:19 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஆத்தூர் பகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வரக்கூடாதா. விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா. தீய சக்தி திமுக தினமும் அவதூறு, ஆபாசமாக பேசி வருகிறது. சினிமாவிலும், அரசியலிலும் நான் ஜெயித்ததற்கு தமிழக மக்கள் தான் காரணம். மக்களின் ஆதரவால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் வாக்குகள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடிந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மு. க. ஸ்டாலின் ஆபாசமாக பேசியது போல தற்போதும் பெண்களுக்கு எதிராக ஆபாச நதிகள் ஓடி வருகிறது. திமுகவுக்கு ஆதரவாக அதிமுகவும் துணையாக பேசி வருகிறது.

அதிமுகவின் முக மூடி கிழிந்து தொங்குகிறது

திமுகவுடன் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவர்களின் திட்டம் அனைத்தும் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிமுக தலைமையின் முகமூடி கிழிந்து விட்டது. திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஆகிவிடும். எனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களியுங்கள். மற்றும் பலர் பாஜகவின் ஒரு பிரான்ச் ஆக இருந்தது. தற்போது திமுகவின் கிளையாக மாறி உள்ளது. சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசு என்று கூறுபவர்கள், நான் பேச ஆரம்பித்தால் என்னை பேச விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.

மேலும் படிக்க: என்னை தொடாதீர்கள்.. மீறி தொட்டால்… முதல்வர் விஜய் தெரிவித்த வார்த்தை!

ஊழல் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூற முடியுமா

ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். இனியும் விடப் போவதில்லை என்று மு. க. ஸ்டாலினுக்கு எதிராக தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் காசை தொடவில்லை. ஊழல் செய்யவில்லை என்று உங்களால் தெரிவிக்க முடியுமா. அரசியலுக்கு வருவதற்கு முன் சொத்து கணக்கு எவ்வளவு. வந்த பின்னர் சொத்து கணக்கு எவ்வளவு என்று தெரிவிக்க முடியுமா. மு க ஸ்டாலின் தோற்றாலும், ஜெயிச்சாலும் அவர்தான் எனக்கு ஸ்வீட்டான அங்கிள். ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே ஒன்று திமுக… மற்றொன்று தவெக..

எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி

நான் பாலத்தை ஆய்வு செய்த போது நாங்கள் கட்டிய பாலத்தில் இவர் என்ன ஆய்வு செய்கிறார் என்று திமுவினர் கூறுகின்றனர். மு.க.ஸ்டாலினிடம் பணம் இல்லாத நிலையில் கணக்கில் வராத பணத்தை வைத்து சென்னையில் பாலம் கட்டினாரா மு. க. ஸ்டாலின். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கும் திமுக தான் எதிரி… எனக்கும் திமுக தான் எதிரி.. திமுக வேறு பாஜக வேறு கிடையாது. திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஸ்டாலின் சார் வாயத் திறங்க சார்.. ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்.. எதை கூறுகிறார்!

Follow Us