Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

தவெகவில் இணையும் பாஜக முன்னாள் தலைவர் – வெளியான தகவல் – முழு விவரம் இதோ

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் செங்கோட்டையன் இணையவுள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய பிரமுகர் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநில முன்னாள் பாஜக தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

PM Modi Road Show | பீகாரில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ சென்ற பிரதமர் மோடி: பரபரக்கும் தேர்தல் களம்!

Bihar elections: பீகார் மக்கள் நல்லாட்சி அளிக்கும் அரசை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை தனது உள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். இத்தனை நாள் பீகார் பக்கம் செல்லாத ராகுல் காந்தி சமீபத்தில் தான் அங்கு பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

“SIR” குறித்து உதயநிதிக்கே சரியாகத் தெரியவில்லை: விளாசிய தமிழிசை செளந்தரராஜன்!

Tamilisai soundararajan explains about SIR: சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, SIR குறித்து திமுக பயப்பட வேண்டியது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Thevar jayanthi 2025: பசும்பொன்னில் இன்று காலை முத்துராமலிங்கத் தேவருகுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அதைத்தொடர்ந்து, சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் படையெடுத்துள்ளனர்.

விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி?.. உண்மையை போட்டுடைத்த அமித்ஷா!!

Bjp alliance talk with Vijay: திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டுமென்று ஒரு தரப்பும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முயற்சியில் மற்றொரு தரப்பும் விஜய்யை டார்க்கெட் செய்து வருகின்றன. அதேசமயம், விஜய்யோ பாஜக, திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

Suresh Gopi: வருமானம் குறையுது.. அமைச்சர் பதவி வேண்டாம்.. சுரேஷ்கோபி முடிவு!

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது தனிப்பட்ட வருமானம் குறைந்ததால் அமைச்சர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு பதிலாக மூத்த பாஜக தலைவர் சதானந்தன் மாஸ்டரை பரிந்துரைத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முழுநேர நடிகனாக திரும்பும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..

Nainar Nagendran: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ 2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது” என பேசியுள்ளார்.

என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..

TVK Leader Vijay: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், “ 2026 இல் போட்டி என்பது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே மட்டும்தான். நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே என் மீது இவ்வளவு நம்பிக்கையா? பார்த்து விடலாம்... ஒரு கை பார்த்து விடலாம்” என பேசியுள்ளார்.

ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Nainar Nagendran - JP Nadda: டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ அக்டோபர் மாதம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பங்கேற்க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?

Edappadi Palaniswami Meet With Amit Shah: செப்டம்பர் 16, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது

நெருங்கும் தேர்தல்.. பாஜகவின் மாநில மாநாடுகள்.. பிரதமர் மோடி பங்கேற்க திட்டம்..

BJP State Conference: பாஜக வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த மாநாடுகள் நடைபெறவுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன்.. தேர்வு செய்ய என்ன காரணம்?

BJP Vice President Candidate: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சி.பி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அவருக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் அதிகாரம் அளித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகல்.. டிடிவி தினகரன் அறிவிப்பு..

TTV Dinakaran: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.. விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்..

BJP Meeting At Delhi: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், டெல்லியில் செப்டம்பர் 3 2025 தேதியான இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.