AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மார்ச் 11-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. NDA-ன் பிரம்மாண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

PM Narendra Modi To Visit Tamil Nadu On 11 March | மார்ச் 01, 2026 அன்று புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், மார்ச் 11-ல் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

மார்ச் 11-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. NDA-ன் பிரம்மாண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!
பிரதமர் நரேதிர மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Mar 2026 11:39 AM IST

திருச்சி, மார்ச் 04 : மார்ச் 11, 2026 அன்று திருச்சியில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) மீண்டும் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2026, மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளது இது இரண்டாவது முறையாகும். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில், விரைவில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன. கடந்த தேர்தலை போலவே திமுக இந்தியா கூட்டணியுடன் களம் காண தயாராகி வருகிறது.

இதையும் படிங்க : 30 ரயில் நிலையங்களில் குளு குளு வசதியுடன் காத்திருப்பு அறை.. தெற்கு ரயில்வேயின் பிரம்மாண்ட ஏற்பாடு.. பல்வேறு வசதிகள்!

மறுபுறம் அதிமுகவோ பாஜக, பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் வலுவான கூட்டணியை உறுதி செய்துள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை அறிவிக்காமல் உள்ளன. இந்த நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 02, 2026 அன்று டெல்லி சென்று தொகுதி பங்கீடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தார்.

மார்ச் 11 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி

முன்னதாக தேசிய ஜனநாய கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் 2026, ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற்றது. சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது கூட்டம் மார்ச் 01, 2026 அன்று புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மத்திய அரசி முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க : தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!

இந்த நிலையில், மார்ச் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். திருச்சியில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us