AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3 நாள் காவல் நிறைவு.. சிறையில் போலீசார் துன்புறுத்தினரா.. நீதிபதியிடம் அன்பில் மகேஷ் அளித்த பதில்!

Anbil Mahesh Remanded Judicial Custody : தனியார் பள்ளி அங்கீகாரத்துக்கு ரூ.400 கோடி முறைகேட்டில் கைதான அன்பில் மகேஷுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் துன்புறுத்தினரா என்பதற்கு நீதிபதியிடம் பதில் அளித்தார்.

3 நாள் காவல் நிறைவு.. சிறையில் போலீசார் துன்புறுத்தினரா.. நீதிபதியிடம் அன்பில் மகேஷ் அளித்த பதில்!
அன்பில் மகேஷ் ( கோப்புப்படம்).
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 04 Nov 2026 17:50 PM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ. 400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு கடந்த 2- ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரை 3 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் முதல் நாளில் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டு இருந்தனர். 2- ஆவது நாளான நேற்று பெண் தொழிலதிபரும், ஆடை வடிவமைப்பாளருமான சண்முகப்பிரியா வீட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல் நிறைவு

இதைத் தொடர்ந்து, இன்று புதன் கிழமை 3- ஆவது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், முறைகேட்டில் பெறப்பட்ட பணம் பல்வேறு நபர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டதா. அப்படி என்றால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதனிடையே, 3 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி.. முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு!

காவலில் போலீசார் துன்புறுத்தினார்களா

அப்போது, அன்பில் மகேஷிடம் போலீஸ் காவலில் முறையான உணவு வழங்கப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, அன்பில் மகேஷ், தனக்கு முறையான உணவு வழங்கப்பட்டது என்றும், போலீஸ் காவலில் தன்னை உடல் ரீதியாகவோ அல்லது மனதளவிலோ துன்புறுத்தவில்லை என்று பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து, நவம்பர் 6- ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்பில் மகேஷ் மனைவியிடம் விசாரிக்க திட்டம்

முன்னதாக அவரிடமும், இதே வழக்கில் தொடர்புடைய முத்துகுமார் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மனைவி ஜனனி வங்கிக் கணக்கில் முறைகேடாக பெற்ற பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், அவரிடமும் விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரூ. 400 கோடி முறைகேடு வழக்கு வேகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு – பெருந்துறையில் முதல்வர் விஜய்

Follow Us