AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் ரூ.10.. அறிமுகமாகும் தானியங்கி இயந்திரம்!

Reverse Vending Machine In Tasmac: ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் என்பது காலி பாட்டில்களை இயந்திரத்திற்குள் செலுத்தியவுடன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் பயன்பாட்டு நிலையைச் சரிபார்த்து, அதற்கான தொகையை வழங்கும் தானியங்கி கருவியாகும். வாடிக்கையாளர் காலி மதுபாட்டிலை இயந்திரத்தில் செலுத்தியதும், அதில் இடம்பெற்றுள்ள தனித்துவமான குறியீடு ஸ்கேன் செய்யப்படும்.

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் ரூ.10.. அறிமுகமாகும் தானியங்கி இயந்திரம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Nov 2026 15:58 PM IST

நவம்பர் 4, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் (Reverse Vending Machines) அமைக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் படிப்படியாக நிறுவப்பட உள்ளன.

எப்படி செயல்படும் இந்த புதிய திட்டம்?

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், காலி மதுபாட்டில்கள் சாலையோரங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் வீசப்படுவதைத் தடுப்பதுடன், அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவதாகும். இதற்காக வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய மதுபாட்டில்களைப் பயன்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து ரூ.10 திரும்பப் பெறும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

மேலும் படிக்க: 450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!

ஆனால், இதுவரை ஊழியர்கள் நேரடியாக காலி பாட்டில்களைப் பெற்று, அதற்கான தொகையை வழங்கி வந்தனர். இந்த நடைமுறையில் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது, பாட்டில்களைச் சேமித்து வைப்பதற்கான இடப்பற்றாக்குறை, பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கணக்குகளில் முரண்பாடுகள் போன்ற பிரச்சினைகள் இருந்து வந்தன. இதனைத் தவிர்த்து, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையை வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுத்தும் வகையில் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ரூ.10 உடனடி வரவு.. மொபைல் எண் உள்ளிட்டால் போதும்!

ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் என்பது காலி பாட்டில்களை இயந்திரத்திற்குள் செலுத்தியவுடன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் பயன்பாட்டு நிலையைச் சரிபார்த்து, அதற்கான தொகையை வழங்கும் தானியங்கி கருவியாகும். வாடிக்கையாளர் காலி மதுபாட்டிலை இயந்திரத்தில் செலுத்தியதும், அதில் இடம்பெற்றுள்ள தனித்துவமான குறியீடு ஸ்கேன் செய்யப்படும். இதன் மூலம் அந்தப் பாட்டில் அங்கீகரிக்கப்பட்டதா, ஏற்கனவே திரும்ப ஒப்படைக்கப்பட்டதா என்பது தொழில்நுட்பத்தின் உதவியுடன் சரிபார்க்கப்படும். இதனால் ஒரே பாட்டிலுக்கு மீண்டும் மீண்டும் பணம் கோருவது போன்ற முறைகேடுகளையும் தடுக்க முடியும்.

இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2,000 காலி பாட்டில்களைச் சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் கடைகளில் பாட்டில்களைப் பாதுகாப்பாகச் சேகரித்து வைப்பதற்கான வசதியும் ஏற்படும்.

மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!

பணம் எப்படி கிடைக்கும்?

இந்தப் புதிய நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக, காலி பாட்டிலை இயந்திரத்தில் செலுத்திய பிறகு வாடிக்கையாளர் தங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.10 உடனடியாக வரவு வைக்கப்படும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

யுபிஐ (UPI) வசதி பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் வழங்கப்படும். யுபிஐ வசதி இல்லாதவர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட ரசீது வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி பின்னர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது அதற்கான தொகையைப் பயன்படுத்திக்கொள்ளவோ முடியும்.

இதன் மூலம் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படுவதுடன், ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us