AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!

Ramanathapuram Hashish Seized : ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 19.8 கிலோ ஹஷிஷை தனிப்படை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் இதில் தொடர்புடைய ஒருவரை கைது செய்த நிலையில், அவருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கின்றனர்.

இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!
பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Nov 2026 15:27 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக பதுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ ஹஷிஷ் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்டீஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாசி பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் காவல் ஆய்வாளர் டேவிட் ரவி ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரோ ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேக நபரிடம் 2 கிலோ ஹஷிஷ் பறிமுதல்

இந்த விசாரணையில், அந்த நபர் திருவாடானை பகுதியைச் சேர்ந்த மனோ ( 34 வயது) என்பதும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2 கிலோ ஹஷீஷ் எனப்படும் போதை பொருள் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த நபரின் வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டில் சுமார் 17.8 கிலோ ஹஷீஷ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க: திடீர் பிரசவ வலி.. ஆம்புலன்ஸில் குழந்தை பெற்ற பெண்.. சிவகங்கையில் சுவாரஸ்யம்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19.8 கிலோ ஹஷிஷ் பறிமுதல்

இதைத் தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17.8 கிலோ மற்றும் மனோவிடம் இருந்த 2 கிலோ என மொத்தம் 19.8 கிலோ ஹஷீஷை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப் பொருளானது கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு கொண்ட போதைப் பொருள் என போலீசார் தெரிவித்தனர். இது இந்திய மதிப்பில் ஒரு கிலோ ஹஷீஷ் ரூ. 2 இலட்சம் வரையிலும், இலங்கையில் சுமார் 10 லட்சம் வரையிலும் விற்பனையாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா

கைது செய்யப்பட்ட மனோவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே 2 போதை பொருட்கள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த ஆண்டு தொடக்கத்தில் எஸ். பி. பட்டினம் காவல் நிலைய எல்லையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதா என்பன கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கடலூரில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீர் உயிரிழப்பு.. கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை!

Follow Us