நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசு குழுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
CM Vijay Demands NEET Abolition : சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக்குழுவினரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 4 : மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை (NEET Exam) முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசின் உயர்மட்டக் குழுவிடம் தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். மேலும், உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யை சந்தித்த மத்திய அரசின் உயர்மட்டக் குழு
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக்குழுவினரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் உயர்மட்டப் பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, குழு உறுப்பினர்களான பேராசிரியர் வி. காமகோடி, அனிதா கர்வால் மற்றும் சங்கர் மருவாடா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு




மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மீதான சிக்கல்கள் பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்மட்டக் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும மத்திய அரசின் உயர்மட்டக் குழுவுடனான சந்திப்பின்போது, மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவம் மட்டுமின்றி, பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டாகவும், மாணவர்கள் பள்ளியில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உயர்மட்டக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிக்க : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்மட்டக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 11, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.
முன்னதாக நவம்பர் 4, 2026 இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில்ரூ. 17 கோடியே 56 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.