AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Man Sentenced to Triple Life Imprisonment | கரூரில் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கணவனுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட, மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Nov 2026 08:40 AM IST

கரூர், நவம்பர் 04 : கரூரில் (Karur) மனைவியை கொலை செய்த நபருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி, கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 2023 ஆம் ஆண்டு தனது மனைவியை தனியாக அழைத்துச் சென்று அந்த நபர் இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த நிலையில், மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியை திட்டமிட்டு கொலை செய்த கணவன்

கரூர் மாவட்டம், வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். 33 வயதாகும் இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு தனது மனைவியை காரில் அழைத்துச் சென்ற சிவக்குமார், அவரை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த கொலை சம்பவம் வெளியே தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க : பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இரா.முருகன் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி

இந்த கொடூர கொலை வழக்கின் விசாரணை கரூர் மாவட்ட, மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததன் காரணமாக இந்த வழக்கில் சிவக்குமாருக்கு சுமார் 3 ஆயுள் தண்டனைகளை வழங்கி கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய் – காவலர்களிடம் கேள்வி

3 ஆயுள் தண்டனை என்றால் என்ன?

ஆயுள் தண்டனை என்பது குற்றவாளி தனது வாழ்நாள் முடியும் வரை சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான். நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது 14 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். ஆனால், சிவக்குமார் வழக்கில் 3 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us