Suriya: ஹீரோவா? இல்ல வில்லனா?.. ரோலக்ஸ் படம் குறித்து சூர்யா பேச்சு!
Suriya on Rolex: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் கொண்ட நடிகர் சூர்யா. இவரின் சீன் திரைப்படமானது வரும் 2026 நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, ரோலக்ஸ் படம் குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரை ரசிகர்கள் ‘தி ஒன்’ (The One) என்றும் அன்புடன் அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என்ற திரைப்படம் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்திற்கு படக்குழு தற்போது சீன் (Scene Movie) என டைட்டில் வைத்திருந்தது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் நடித்துள்ளார். இந்த படமானது கலக்கல் காமெடி மற்றும் க்ரைம் திரில்லர் பானையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் தொடர்பாக தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் பேசிய சூர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரோலக்ஸ் படத்தில் இணைவது குறித்தும், ஹீரோவாக அல்லது வில்லனாக நடிக்கவேண்டுமா? என ரசிகர்களிடம் பரிந்துரை கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது அல்லவா சர்ப்ரைஸ்.. SK27 பட இயக்குநருக்கு ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் பரிசளித்த சிவகார்த்திகேயன்!
லோகேஷ் கனகராஜுடன் ரோலக்ஸ் படத்தில் இணைவது குறித்து சூர்யா பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “ரோலக்ஸ் படம் குறித்து நாங்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். நிறைய வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.. தயவுசெய்து லோகியை என்னை அழைக்க சொல்லுங்கள்.. லோகேஷ் கனகராஜை என்னை சந்திக்க சொல்லுங்கள்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது கராத்தே பாபு படத்தின் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?
நான் ஹீரோவாக நடிக்கணுமா? இல்ல வில்லனாகவா?.. வில்லன் ரோல் சிறந்ததா? சினிமாவில் நிறைய ஹீரோக்கள் வந்துவிட்டார்கள். ஒரே ஒரு வில்லனா? கண்டிப்பாக அதையே செய்வோம்” என அதில் நடிகர் சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரோலக்ஸ் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா பேசியது குறித்த வீடியோ பதிவு:
#ROLEX Update from #Suriya 🔥:
“We are still talking.. There’s a lot of process happening.. Please tell Loki to call me..😄 Please ask Loki to come and meet me.. We’ll make it happen.. Do you want me to play as hero or villain..? Villain is better..? Too many heroes have happened.. One villain..? Ok we’ll do it..” 💥 https://t.co/eYiBS4Gvxt
— Laxmi Kanth (@iammoviebuff007) November 2, 2026
நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47வது திரைப்படமாக சீன் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்திற்கு பின் சூர்யா, இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48 என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருடன் கயாடு லோஹர் இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 2 ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகிவருகிறது. இப்படம் 2027ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



